Home

Friday, October 8, 2010

நல்ல நாள் - நல்ல நேரம் பார்க்கலாம் ----- K.S. கிருஷ்ணன்.

ஒரு உண்மையை நான் முதலிலேயே உங்களிடம் ஒப்புக்கொண்டு விடுகிறேன். நான் ஜோதிடனே  அல்ல. உங்களைப்போலவே ஒரு சாதாரணமானவன் தான். ஆனால் இதில் சற்று அதிகமான ஒரு ஈடுபாடு இருந்ததால் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று கற்று அதில் நான் தெரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஜோதிடத்தில் கரை கண்டவர்கள், பெரிய மேதைகள் இதைப்படித்து இதில் இருக்கும் ஓட்டைகளை எண்ணி நகைப்பார்களோ என்னவோ? நான் நம்பிக்கையுடன் இதை உபயோகப்படுத்தி வருவதால் மற்றவர்களுக்கெல்லாம் இதை சொல்லிக் கொடுப்போம் என்று எண்ணித்தான் இதை எழுத ஆரம்பித்தேன். உங்களுக்கும் இது பயன்பட்டால் நான் பெரும் பேறாக நினைத்து மகிழ்வேன். நான் ஒரு அரைகுறை என்பது உங்களுக்கு பயமாகயிருந்தால் விட்டுவிடுங்கள்.
  அடுத்தது இதைவிட முக்கியமான விஷயமாகும். முஹூர்த்தம் என்பதன் உயிர்நாடி லக்கினம் ஆகும். பன்னிரண்டு ராசிகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு நாளில் (கிட்டத்தட்ட) இரண்டு, இரண்டு மணி நேர அளவாக வரும் காலகட்டம் லக்கினம் என்று சொல்லப்படுகின்றது. அதன்படி ஒரு நாளில் வரிசையாக அந்தந்த ராசிகளின் பெயர்களுடன் பன்னிரண்டு லக்கினங்கள் வரும். நம் வாழ்க்கையின் மிக மிக முக்கிய நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம் (புதுமனை புகுவிழா), காதணி குத்துதல், மஞ்சள்/பூப்பு நீராட்டு, பூணூல் அணிவித்தல், மந்திரோபதேசம், முதலானவற்றுக்கு கட்டாயமாக உங்கள் குடும்ப ஜோதிடரை அணுகி முஹூர்த்த லக்கினம் குறித்து வாங்கி அதன்படி செய்யவேண்டியது அவசியமாகும். லக்கினம் கணிப்பது குறித்து ஜோதிட நூல்களில் பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நான் இங்கு விளக்கத்தொடங்கினால் இது பெரிய புத்தகமாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல. அது நம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தருவதும் தேவையற்றதும் ஆகும். அதனால் லக்கினம் நிர்ணயம் செய்வதைத் தவிர்த்துவிட்டு மற்றப்படி பொதுவாக ஒரு நல்ல நாள் தீர்மானம் செய்ய சுலபமான வழிகள் உள்ளன. அவற்றைத்தான் நான் கீழே விளக்கியுள்ளேன்.
நல்லநாள் பார்க்க உங்களுக்கு முதல் தேவை ஒரு பஞ்சாங்கம். மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், காஞ்சி மடத்து பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஆற்காடு பஞ்சாங்கம், வாசன் பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்று பலப்பல பஞ்சாங்கங்கள் எல்லா இடங்களிலும் சுலபமாகக் கிடைக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றைத் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.
எளியமுறையில் நல்லநாள் பார்க்கக் கற்றுக்கொடுக்கும் இந்தப் பகுதியில் உங்களுக்குப் பொருந்தும்,  உங்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்களை முதலில் அறிந்துகொள்ளுங்கள். இதை நட்சத்திர தாரை அல்லது தாராபலம் என்பார்கள். இதில் உங்கள் ராசியிலிருந்து எட்டாம் இடம் உள்ள ராசியில் சந்திரன் ஒவ்வொருமுறை வந்துசெல்வதை சந்திராஷ்டமம் என்பார்கள். சந்திராஷ்டமத்தில் எதுவும் செய்வதைத் தவிர்ப்பார்கள். ஆகவே அந்த ராசியில் விழும் நட்சத்திரங்களை மட்டும் தவிர்த்துவிட்டு உங்களுக்கு உதவிடும் அனுகூலமான மற்ற நட்சத்திரங்களை அடுத்துவரும் பக்கங்களில் பட்டியலாகக் கொடுத்திருக்கிறேன். இனி நீங்கள் இருபத்தேழு நட்சத்திரங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரங்களில் மட்டுமே உங்களுக்கு முக்கியமான எல்லா காரியங்களையும்  செய்து கொள்ள வேண்டும்.


உங்கள் நட்சத்திரம்
உங்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்கள்
மே  ரா சி
1. அச்வினி



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
உத்திரட்டாதி
ரேவதி

மகம்
மூலம்

2. பரணி



*
உத்திரம்
உத்திராடம்

*
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
*
புனர்பூசம்
ரேவதி

3. கிருத்திகை  (1)



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
உத்திரட்டாதி
ரேவதி
*
உத்திரம்
உத்திராடம்

ரி ப ரா சி
4. கிருத்திகை 2,3,4



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
ரேவதி
உத்திரம்
உத்திராடம்
5. ரோஹிணி



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
உத்திரம்
*
உத்திராடம்
ஹஸ்தம்
திருவோணம்
6. மிருகசீரிடம் 1,2



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
சித்திரை

அவிட்டம்
உத்திரம்
உத்திராடம்



உங்கள் நட்சத்திரம்
உங்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்கள்
மிதுன ராசி
7. மிருகசீரிடம் 3,4



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
அவிட்டம்
உத்திரம்
சித்திரை
8. திருவாதிரை



*
புனர்பூசம்
ரோஹிணி
மிருகசீரிடம்
*
ஹஸ்தம்
சித்திரை
திருவோணம்
*
அவிட்டம்
ரேவதி
ஸ்வாதி
*
சதயம்


9. புனர்பூசம் 1,2,3



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
உத்திரம்


 ரா சி
10. புனர்பூசம் 4



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
ஸ்வாதி
உத்திரம்
உத்திராடம்
*
மிருகசீரிடம்
திருவாதிரை
சித்திரை




11. பூசம்



*
அச்வினி
மகம்
மூலம்
*
மிருகசீரிடம்
உத்திரம்
உத்திராடம்
*
சித்திரை
ரேவதி

12. ஆயில்யம்



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
உத்திரம்
உத்திராடம்
புனர்பூசம்
*
மிருகசீரிடம்
சித்திரை
ரேவதி
*
அச்வினி
மகம்
மூலம்


உங்கள் நட்சத்திரம்
உங்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்கள்
சி ம்  ரா சி
13. மகம்



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
அச்வினி
*
மூலம்


14. பூரம்



*
உத்திரம்
உத்திராடம்

*
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
*
புனர்பூசம்
விசாகம்

15. உத்திரம் 1



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திராடம்




ன் னி  ரா சி
16. உத்திரம்  2,3,4



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
ரேவதி
 உத்திராடம்

17. ஹஸ்தம்



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
மகம்
மூலம்
உத்திரம்
*
உத்திராடம்
ரோஹிணி
திருவோணம்
18. சித்திரை  1,2



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
மிருகசீரிடம்
மகம்
மூலம்
 *
உத்திரம்
உத்திராடம்
அவிட்டம்


உங்கள் நட்சத்திரம்
உங்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்கள்
து லா  ரா சி
19. சித்திரை  3,4



*
அச்வினி
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
மகம்
மூலம்
உத்திரம்
உத்திராடம்
அவிட்டம்

20. ஸ்வாதி



*
புனர்பூசம்
மிருகசீரிடம்
அவிட்டம்
*
ஹஸ்தம்
சித்திரை
சதயம்
*
ரேவதி
திருவாதிரை

*



21. விசாகம் 1,2,3



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
உத்திரம்
உத்திராடம்

வி ரு ச் சி  ரா சி
22. விசாகம் 4



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
உத்திரம்
சித்திரை
ஸ்வாதி
*
உத்திராடம்
அவிட்டம்
சதயம்
23. அனுஷம்



*
அச்வினி
மகம்
மூலம்
*
உத்திரம்
சித்திரை
உத்திராடம்
*
ரேவதி


24. கேட்டை



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
உத்திரம்
உத்திராடம்
அவிட்டம்
*
அச்வினி
மகம்
மூலம்
*
சித்திரை
ரேவதி




உங்கள் நட்சத்திரம்
உங்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்கள்
னு சு ரா சி
25. மூலம்




ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
அச்வினி
அனுஷம்
உத்திரட்டாதி
*
ரேவதி
மகம்

26. பூராடம்



*
மிருகசீரிடம்
உத்திரம்
உத்திராடம்
*
புனர்பூசம்
சித்திரை
அவிட்டம்
*
ரேவதி


27. உத்திராடம்  1



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
உத்திரம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
ரேவதி


ர ரா சி
28. உத்திராடம் 2,3,4



*
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
ரேவதி
உத்திரம்

29. திருவோணம்



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
ரோஹிணி
மூலம்
*
உத்திராடம்
ஹஸ்தம்

30. அவிட்டம்  1,2



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மிருகசீரிடம்
மூலம்
 *
உத்திரம்
உத்திராடம்
சித்திரை


உங்கள் நட்சத்திரம்
அநுகூலமான நட்சத்திரங்கள்
கு ம் ப ரா சி
31. அவிட்டம்  3,4



*
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
அவிட்டம்
மிருகசீரிடம்
உத்திராடம்
32. சதயம்



*
புனர்பூசம்
ரோஹிணி
மிருகசீரிடம்
*
சித்திரை
திருவோணம்
அவிட்டம்
*
ரேவதி
திருவாதிரை
ஸ்வாதி
33. பூரட்டாதி 1,2,3



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
ஸ்வாதி
மிருகசீரிடம்
திருவாதிரை
*
உத்திராடம்
அவிட்டம்
சதயம்
 மீ ன ரா சி
34. பூரட்டாதி 4



*
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
*
அச்வினி
மகம்
மூலம்
*
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
*
மிருகசீரிடம்
திருவாதிரை
அவிட்டம்
 *
சதயம்


35. உத்திரட்டாதி



*
அச்வினி
மகம்
மூலம்
*
மிருகசீரிடம்
உத்திரம்
உத்திராடம்
*
ரேவதி
பூசம்
அனுஷம்
36. ரேவதி




பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி

உத்திரம்
உத்திராடம்
புனர்பூசம்

மிருகசீரிடம்
அவிட்டம்
அச்வினி

மகம்
மூலம்





            இப்படிப்பார்க்கும்போது அதிகபட்சமாக பத்து, பன்னிரண்டு நட்சத்திரங்கள்தான் தேறுகிறது இல்லையா? மீண்டும் இவைகளுக்குள்ளும் நாம் சில அளவுகோள்களுக்கு ஏற்பவும், மற்றும் நம் தேவைகளுக்கு ஏற்பவும் இன்னும் சலித்து எடுத்துப் பார்க்கவேண்டும்.
                        கீழே கொடுககப்பட்டுள்ள பட்டியல் நட்சத்திரங்களை வகைப்படுத்துகிறது:

மேல் நோக்கு உள்ளவை:
1.  ரோஹிணி   2. திருவாதிரை   3. பூசம்   4. உத்திரம்          5. உத்திராடம்   6. திருவோணம்   7. அவிட்டம்   8. சதயம்        9. உத்திரட்டாதி.  

சம நோக்கு உள்ளவை:
1. அசுவினி   2. மிருகசீரிஷம்   3. புனர்பூசம்   4. ஹஸ்தம்       5. சித்திரை   6. சுவாதி   7. அனுஷம்   8. கேட்டை   9. ரேவதி  

கீழ் நோக்கு உள்ளவை:
1. பரணி   2. கார்த்திகை   3. ஆயில்யம்   4. மகம்   5. பூரம்     6. விசாகம்   7. மூலம்   8. பூராடம்  9. பூரட்டாதி.


மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் இடம் பெற்றிருந்தாலும் கீழ்வரும் ஒன்பது நட்சத்திரங்கள் எந்த நல்ல முஹூர்த்தங்களுக்கும் உதவாதவையாகும். ஆகவே எப்போதும் இவைகளைத் தவிர்த்துவிடுங்கள் :

1. பரணி   2. கார்த்திகை   3. ஆயில்யம்   4. புனர்பூசம் 5. விசாகம்   6. கேட்டை 7. பூரம்   8. பூராடம்  9. பூரட்டாதி.

இப்போது உங்களுடைய ஜன்ம நட்சத்திரப்படி அனுகூலம் தரும் நட்சத்திரங்களின் பட்டியலில் எவையெல்லாம் மேல் நோக்கு, கீழ் நோக்கு மற்றும் சம நோக்கு என்று பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி மேல் நோக்கு பட்டியலில் இடம் பெறுபவை எவைகளோ அவற்றில் நீங்கள் உங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை  விரும்பும் எல்லா முக்கிய காரியங்களையும் தைரியமாகச் செய்யலாம். சில உதாரணங்கள் தருகிறேன்:

  1. பணம் முதலீடு செய்வது, ஒப்பந்தங்களில்/பத்திரங்களில் கையெழுத்திடுவது, முதல்முறையாக பணம் செலுத்துவது.
  2. புதிதாகச் சேருவது பள்ளியில், கல்லூரியில், வேலையில்.
  3. புதிதாகத் தொடங்குவது கடை, கம்பனி, வியாபாரம், தொழில், பிராஜக்ட், வகுப்பு, பாடம்-படிப்புகள், ஆராய்ச்சி.
  4. புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்.
  5. முக்கியஸ்தரை நம் காரியத்திற்காக சந்திப்பது.
  6. மதிப்பு மிகுந்த பொருட்களை விலைக்கு வாங்குவது-விற்பது.
  7. விமானப்பயணம் மேற்கொள்ளுவது.

இதே போலவே சம நோக்குள்ளவற்றில் உழவு ஓட்டுவது, வாய்க்கால் வெட்டுவது, பிளாட்பாரம் அமைப்பது, கார், டூ வீலர் போன்ற வாகனங்கள் மற்றும் படகு, கப்பல் ஓட்டப்பழகுவது, ஸ்கேட்டிங், ஸ்கீயிங் போன்ற நீர் விளையாட்டுகள் பழகுவது, தரை மற்றும் கடல் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

இதே போலவே கீழ் நோக்குள்ளவற்றில் அஸ்திவாரம்/பேஸ்மெண்ட் தோண்டுவது, கிணறு/போர் போடுவது, பள்ளம் வெட்டுவது, கணக்கு/கம்ப்யூட்டர் இவற்றில் ஸ்டெப் எழுதுவது/ டெரிவேஷன் போட்டுப்பார்ப்பது நன்கு கூடிவரும்.

தொடர்ந்து, இனி வருகின்ற முப்பது நாட்களில் உங்களுக்கு நல்ல நாள் எது - அதில் நல்ல நேரம் எது என்று கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தை எடுத்து  

1. என்றைய தினம் கரிநாள், என்றைய தினம் தனியனாள்,  என்று அமாவாசை மற்றும் பௌர்ணமி என்று பார்த்து அவைகளை விட்டுவிட்டு
2. முப்பது நாட்களுக்குள் திங்கள், புதன், வியாழன், வெள்ளி இந்த நான்கு கிழமைகளில் உங்களுக்கான பட்டியலில் உள்ள அனுகூலமான நட்சத்திரங்கள்  எதுவும் வருகின்றனவா என்று கவனியுங்கள்.  (ஞாயிற்றுக்கிழமையும் கூட கடைசிபட்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.)
3. செவ்வாயும் சனியும் முஹூர்த்த நாட்களில் சேர்க்கப்படுவதில்லை என்றாலும் மாலை அஸ்தமனத்திற்குப் பிறகு வாரதோஷம் கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாத மிகவும் அவசரமான சந்தர்ப்பங்களில் இந்த இருநாட்களிலும் கூட முன்னிரவு நேரங்களில் நல்ல நேரம் பார்த்து செய்யலாம் என்று எண்ணுகிறேன்.
3. பிறகு அன்றைய தினத்தில் பின்வருவதில் உள்ள எந்த சுபதிதி உள்ளது என்று பார்க்கவும் :
1. தேய்பிறை துவிதியை
2. தேய்பிறை பஞ்சமி / வளர்பிறை பஞ்சமி
3. வளர்பிறை சப்தமி
4. வளர்பிறை தசமி
5. வளர்பிறை ஏகாதசி
6. வளர்பிறை துவாதசி.
7. வளர்பிறை த்ரிதீயை, ஷஷ்டி. (இவை இரண்டும் மேலே சொல்லியவற்றில்  எதுவும் தேறவில்லை என்றால் பரவாயில்லை.) 



[ஒரு முக்கிய விஷயம் அவசியம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் வளர் பிறை என்பது பொதுவாக அமாவாசை முதல் பௌர்ணமி வரை என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஹூர்த்தம் பார்க்கும்போது இது சிறிது மாறும் - அதாவது வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரைதான் வளர்பிறையாகக்கொள்ள வேண்டும். அமாவாசை "நிறைந்த நாள்" என்று சொல்லபட்டாலும் அது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதுருக் கடன் இறுப்பதற்கே ஏற்றதாகும். அதேபோல பௌர்ணமி திதியும் கோவில்களில் தெய்வத் திருவிழாக்களைக் கொண்டாட ஏற்பட்ட நாளாகும்.]

இதுவரை உங்களுக்கு அனுகூலமான நட்சத்திரம், கிழமை, திதி மூன்றையும் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். தனித்தனியே அவை சிறப்பாக இருந்தாலும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா என்பதைப் பின்வரும் பட்டியலை வைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

சேராத கிழமைகளும் திதிகளும்:
ஞாயிறோடு  - துவாதசி சேராது.
திங்களோடு    ஷஷ்டி, ஏகாதசி சேராது.
புதனோடு      துவிதீயை, சப்தமி சேராது.
வியாழனோடு-  ஷஷ்டி சேராது.
செவ்வாயோடு - துவிதீயை, பஞ்சமி
சனியோடு   -  நவமி


சேராத கிழமைகளும் நட்சத்திரங்களும்:
திங்களோடு -    உத்திரம், சித்திரை, உத்திராடம், உத்திரட்டாதி
                 சேராது.
புதனோடு       அசுவினி, திருவாதிரை, மூலம், அவிட்டம், ரேவதி
                 சேராது.
வியாழனோடு -  ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, உத்திரம்,
                 சதயம் சேராது.
வெள்ளியோடு -  ரோஹிணி, பூசம், மகம், ஸ்வாதி சேராது.
ஞாயிறோடு  -   அசுவினி, மகம், அனுஷம் சேராது.
செவ்வாயோடு -  மிருகசீரிஷம், திருவாதிரை, விசாகம்,
                  உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி


சனியோடு   -  புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை,
                உத்திராடம், திருவோணம், ரேவதி


சேராத கிழமைகளும் திதிகளும் நட்சத்திரங்களும்:

ஞாயிறு + பஞ்சமி + ஹஸ்தம் மூன்றும் சேராது.
திங்கள் + சப்தமி + மகம் மற்றும் அனுஷம் இவை சேராது.
வியாழன் + துவாதசி + (சித்திரை (அ) அனுஷம் (அ) திருவோணம்) சேராது.
வெள்ளி + (துவிதீயை (அ) திருதீயை (அ) ஷஷ்டி (அ) தசமி (அ) ஏகாதசி) + (ஹஸ்தம் (அ) அனுஷம் (அ௦) திருவோணம் (அ) அவிட்டம்) சேராது.
வெள்ளி + தசமி + ரேவதி சேராது.
செவ்வாயோடு சப்தமி, தசமி, பௌர்ணமி, புனர்பூசம், திருவோணம்;
                {பௌர்ணமி-ரோஹிணி} {சப்தமி அஸ்வினி}
சனியோடு   -  நவமி


சேராத திதிகளும் நட்சத்திரங்களும்:

துவிதீயை + அனுஷம்.
பஞ்சமி  + மகம் (அ) ஹஸ்தம்.

சிக்கலாகத் தெரிகிறதா? என்ன செய்வது, நண்பர்களே சலித்துக்கொள்ளவேண்டாம். நல்லநாள் அமைய சிறிது சிரமம் எடுத்துக் கொள்ளத்தான் வேன்டும். மேற்சொன்னபடி ஒருவழியாக அனுகூலமான நட்சத்திரம், கிழமை, திதி மூன்றையும் கண்டுபிடித்தீர்களா?
பிறகு அன்றைய தினம் அமிர்தயோகம், சித்தயோகம் அல்லது சுதா (சுப) யோகம் இவைகள் உள்ளனவா என்று பார்க்கவும் அதாவது அ-அ,  அ-சி,  அ-சு,  சி-சி,  சி-அ,  சி-சு,  சு-சு,  சு-அ,  சு-சி என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இவ்வாறு இருந்தால்தான் அன்று நல்ல நாள் ஆகும்.

ராஹு காலம், எமகண்டம்,  குளிகன் இந்த மூன்றும் ஆகாத நேரங்கள் ஆகும். இவைகளில் ராஹு காலம்,  எமகண்டம் பகலிலும் குளிகன் பகல் இரவு இரண்டிலும் தலா ஒன்றரை மணி நேரம் வீதம்
வந்து போகும். எல்லா பஞ்சாங்கங்களிலும் மற்றும் முக்கால்வாசி காலண்டர்களிலும் இவைகளின் நேரங்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த மூன்றின் கெட்ட நேரங்களையும் எல்லாரும் தவிர்த்துவிடுவது அவசியம்.  

கௌரி காலம் என்பதும் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கௌரி வீதம் பகலுக்கு எட்டு, இரவுக்கு எட்டு என்று மொத்தம் பதினாறு கௌரிகள் வரிசையாக வரும். கிழமையைப் பொறுத்தும் பகல் இரவு என்பதைப் பொறுத்தும் கௌரிகளின் வரிசை மாறும். தன கௌரி, லாப கெளரி, அம்ருத கெளரி, சுப கெளரி, உத்தம கெளரி இவைகளே நாம் தேர்ந்து எடுக்க வேண்டிய நல்ல கௌரிகள் ஆகும்.   

ஹோரா காலம் என்பது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்கிற மாறாத வரிசையில் ஒரு மணிக்கு ஒன்று வீதம் பகலுக்கு பன்னிரண்டு, இரவுக்கு பன்னிரண்டு என்று மொத்தம் இருபத்திநாலு ஹோரைகள் வரிசையாக வரும். கிழமையைப் பொறுத்து ஹோரைகளின் துவக்கம் மாறும். கிழமையின் நாயகனே அன்றைய தினத்தில் முதல் ஹோரையை அதாவது காலை ஆறு மணிக்கு - துவக்கிவைப்பார். அதாவது குரு வாரம் (வியாழக்கிழமை அன்று) குரு ஹோரையில் நாள் துவங்கும். சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை அன்று) சுக்கிர ஹோரையில்  நாள் துவங்கும்.  குரு ஹோரை, சுக்கிர ஹோரை, புத ஹோரை, சந்திர ஹோரை இவைகளே நாம் தேர்ந்து எடுக்க வேண்டிய நல்ல ஹோரைகள் ஆகும்.
இந்துக்கள் நம்பிக்கைப்படி நாள் என்பது காலை ஆறுமணிக்குத்தான் ஆரம்பமாகிறது நடு இரவு பன்னிரண்டு மணிக்கு அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதன்படி காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை பகல் பொழுதும் மாலை ஆறு மணிமுதல் காலை ஆறு மணிவரை இரவுப் பொழுதும் என்று கணக்கிடுகின்றார்கள்.  இதிலும் நீங்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. காலை அல்லது மாலை 6 என்று குறிப்பிடும்போது அது சரியாக I S T  மணி என்று பொருளல்ல. ஏனெனில் ஊருக்கு ஊர் சூரியோதயம், சூரிய அஸ்தமனம் மாறக்கூடியது.  மாதங்களைப் பொறுத்தும் இவை மாறும்,. அதாவது ஜூலை மாசம் உதயம் காலை 5: 50-க்கே ஆகிவிடும். ஆனால் மார்கழி மாசம் பார்த்தால் காலை 6:40-க்குத் தான் உதயம் ஆகும்.
இங்கே எல்லாருக்கும் பொதுவாக  கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்களை நடக்கும் மாசத்தையும்,  ஊரையும் பொறுத்து சிறிது கூட்டியோ அல்லது கழித்தோ அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, நீங்கள் இந்த அட்டவணை நேரங்களை அந்தந்த ஊர், மாசத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து உபயோகியுங்கள்.
   

நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ள நல்ல நாளில் பகல் பொழுதில் கெட்டநேரங்களை நீக்கிவிட்டு மீதி நேரத்தில் ஒன்றரை மணி நேரம்  உள்ள நல்ல கெளரி காலமும் அதற்குள் ஒரு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் வரும் நல்ல ஹோரைதான் அன்றைய நல்லநேரம் ஆகும். அதுவே அந்த அந்த தினத்துக்கு எதிரில் குறிக்கப்பட்டுள்ளது.
    [தொடர்ச்சி... 9
நீங்கள் நாள் நட்சத்திரம் என்று தேர்ந்தெடுக்காவிட்டாலும் கூட அன்று யோகம் நன்றாயிருந்தால் ஒரு அவசரத்திற்கு இந்த அட்டவணையை வைத்து அன்றைய நல்லநேரம் எது என்று பார்த்துக்கொள்ளலாம்.



காலை 6 முதல் மதியம் 12 மணி வரை:


கெளரி
ஹோரை
திங்கள்


காலை 6 முதல் 7 வரை
அமிர்த
சந்திர

லாப
சுக்கிர
புதன்


காலை 9 முதல் 10 வரை
அமிர்த
குரு



வியாழன்


காலை 10:30 முதல் 11 வரை
லாப
புத
காலை 11 முதல் 12 வரை
லாப
சந்திர



வெள்ளி


காலை 10 முதல் 10:30 வரை
அமிர்த
குரு






காலை 6 முதல் மதியம் 12 மணி வரை:

ஞாயிறு


காலை  7 முதல்  8 வரை
உத்தம
சுக்கிர
காலை  8 முதல்  9 வரை
உத்தம
புத
காலை  11 முதல்  12 வரை
அமிர்த
குரு



செவ்வாய்


காலை  8  முதல்  9  வரை
உத்தம
சுக்கிர
காலை  10:30 முதல்  11  வரை
லாப
சந்திர
சனி


காலை  7:30  முதல் 8  வரை
அமிர்த
குரு
காலை  10:30  முதல் 11  வரை
உத்தம
சுக்கிர
காலை  11  முதல் 12  வரை
உத்தம
புத




மதியம் 12-க்கு மேல் மாலை 6 மணி வரை:


கெளரி
ஹோரை
புதன்


மதியம் 1:30 முதல் 2  வரை
சுப
புத
மதியம் 4 முதல்   5  வரை
தன, அமிர்த
குரு



வியாழன்


மதியம் 1  முதல்   1:30  வரை
அமிர்த
குரு



வெள்ளி


மதியம் 1  முதல்  3  வரை
லாப, சுக
சுக்கிர, புத



ஞாயிறு


மதியம் 2 முதல்   3  வரை
தன
சுக்கிர



செவ்வாய்


மதியம் 4 முதல்  மாலை  6  வரை
லாப
புத, சந்திர



சனி


மதியம் 4  முதல்  மாலை 6 வரை
தன, லாப
சுக்கிர, புத







மாலை 6-க்கு மேல் இரவு 9 மணி வரை:


கெளரி
ஹோரை
புதன்


இரவு  7  முதல்  7:30 வரை
லாப
சுக்கிர



வியாழன்


மாலை 6  முதல்  7 வரை
சுக
சந்திர



ஞாயிறு


மாலை 6 முதல் 7 வரை
அமிர்த
குரு



செவ்வாய்


இரவு 7:30  முதல்   8 வரை
உத்தம
குரு



சனி


இரவு 7:30  முதல்   8  வரை
உத்தம
சந்திர
 

                    இவ்வளவுதான்  அன்பர்களே நல்ல நாள் பார்க்கும் எளிய வழிமுறை! கற்றுக்கொண்டு பயனடையும்படி கேட்டுக்கொள்கிறேன். எதுவும் குறை தெரிந்தால் அதை உடனே எனக்குத் தெரிவித்தால் திருத்திக் கொள்வேன். நன்றி.

############################ @@@=*=@@@#################################

No comments:

Post a Comment